இலங்கையில் அதிகரித்துவரும் வயதானவர்கள் : பத்து ஆண்டுகளில் ஏற்படப்போகும் மாற்றம்!!

1503

வயதானவர்கள்..

தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் வயதான மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டில், இலங்கையில் 5 பேரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பான்மையானவர்களாக பெண்கள் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
ஒரு தீவு நாடான இலங்கை காலநிலை மாற்றம், தீவிர வானிலை நிலைமைகளின் விரைவான விளைவுகளுக்கு பாதிக்கப்படையக்கூடியது.

2010 -2018 ஆம் ஆண்டில், சுமார் 14 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் வறட்சி காரணமாக 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், வயதானவர்கள் சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்குகிறார்கள், அவர்கள் அவசரகால சூழ்நிலைகளில் விகிதாசாரமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.