வவுனியா ஓமந்தையில் ஐந்து இலட்சம் பெறுமதியான தாலிக்கொடி அறுப்பு!!

2959

ஓமந்தையில்..

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துச் சென்ற ஒன்று சம்பவம் நேற்று (19.01.2021) இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் மதியம் வீட்டில் குறித்த பெண் இருந்த நிலையில் உள்ளே நுழைந்த திருடன் அவர் அணிந்திருந்த 7 பவுண் மதிப்பான தங்கத் தாலிக்கொடியைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளான்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.