வேகமாக பரவும் கொரோனா : சளி, காய்ச்சல், இருமல், சுவையின்மை ஏற்படுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

2037

அறிவுறுத்தல்..

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சளி, காய்ச்சல், இருமல், சுவையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் முதல் நடவடிக்கையாக தம்மை சுய தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

நான் சமீபத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளேன். எனக்கு சிகிச்சையளித்த வைத்தியர் அனுராதா உள்ளிட்ட வைத்தியக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரவித்துக் கொள்கிறேன்.

நான் தங்கியிருந்த ஹிக்கடுவ ஹோட்டலின் ஊழியர்களுக்கும் நான் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டதிலிருந்து விரைவாக மீட்க விரும்பிய மகா சங்க மற்றும் ஏனைய மத தலைவர்களுக்கும் தீவு முழுவதும் உள்ள எனது அன்பான மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேபோல் சுவையின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் நீங்கள் முதலில் உங்கள் குடும்ப உறுப்பினர்களை விட்டு விலகி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் உங்கள் அருகிலுள்ள பொது சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும். பொறுப்பாக இருப்பதன் மூலம் இந்த நோயை விட்டு நாம் சற்று தொலைவில் இருக்க முடியும். இந்த நேரத்தில் கொரோனா நோய் நாடு முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவியுள்ளதென்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நிலையில் அனைத்து நோயாளிகளையும் சுகாதார மையங்களுக்கு அனுப்புவதற்கான சூழ்நிலை அரசாங்கத்திற்கு இல்லை. ஏனெனில் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஒரு பெரிய தொகையை அரசாங்கம் செலவழிக்க முடியாது.

எனவே அறிகுறிகள் தோன்றினால் சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள பொது சுகாதார ஆய்வாளரால் வீடுகளை சரி பார்க்கும்படி நான் அரசாங்கத்தையும் சுகாதாரத் துறையையும் கேட்டுக் கொள்கிறேன். வீட்டிலேயே சுகாதாரம் அவசியம்.

இதேபோல் எதிர்காலத்தில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களை அழைத்து வர அரசாங்கம் எதிர்பார்க்கும் தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான மையங்களை வழங்குவதும் எளிதான காரியமல்ல.

இதற்கு ஒரு தீர்வாக அவர்கள் நான்கு நாட்களுக்கு தங்கள் சொந்த வீட்டில் வேறு அறை மற்றும் கழிப்பறை வசதிகளையும் வைத்திருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

இதை தவிர வேறு வழியில்லை என்பது நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற எனது உணர்வு. ஆகவே சரியான சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறேன்.

-தமிழ்வின்-