22 பேர் கைது..
வவுனியா பொலிஸார் மேற்கொண்ட 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது பல்வேறு கு.ற்றச் செயல்களுடன் தொடர்புடைய 22 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
“கு.ற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று (23.01.2021) இரவு 7.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையிலான 4 மணிநேர விசேட நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை உத்தரவில் நால்வரும், ஹெ.ரோயின்னுடன் இருவரும், ம.து போ.தை.யி.ல் வாகனம் செலுத்திய மற்றும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கு ற்றச்சாட்டில் பதினொரு நபர்களும், சந்தேகத்தின் அடிப்படையில் வீதியில் நடமாடிய ஐவரும் பேர் என மொத்தமாக 22 நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 நபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அவர்களிடம் வி.சாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
வி சாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்றிலையில் ஆஜ ர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.