தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

1225

சந்திரசேகரம் நுதேர்சன்..

தைப்பொங்கல் தினத்தில் மட்டக்களப்பு, களுதாவளை, சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருப்பழுகாமம், விவுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் மாரியம்மன் ஆலய வீதியில் வசிக்கும் சந்திரசேகரம் நுதேர்சன் எனும் மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டு,

அவசர சிகிச்சை பிரிவில் 10 நாட்கள் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் 2021 ம் ஆண்டு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் 11 ம் தரம் கற்கும் மாணவனாகும்.

தைப்பொங்கல் தினமன்று இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்து ,நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், அதில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.