தென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று : பல மாணவர்கள் பாதிப்பு!!

810

கொரோனா தொற்று..

காலி மாவட்டத்தில் 26 பாடசாலைகளில் கல்வி கற்கும் 43 மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். முதலாவது பாடசாலை தவணை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்த மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனை காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் வைத்தியர் உறுதி செய்துள்ளார். ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான கடந்த 14 நாட்களில் 43 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

போபே, பொத்தல சுகாதார வைத்திய பிரிவிலேயே அதிகமான மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்த பகுதியில் 5 பாடசாலைகளை சேர்ந்த 17 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் கிங்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் 12 மாணவர்கள் கொரோனா தொற்றுள்ளாகியுள்ளனர். ஏனைய பாடசாலைகளில் ஓரிரு மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.