பாகிஸ்தான் அணியை ஆதரித்த மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பல்கலைக்கழகம்!!

443

India Kashmir Students

இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு வழங்கி கோஷங்களை எழுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டில் 60 மாணவர்களை வட இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்று இடைநிறுத்தியுள்ளது.

இந்த மாணவர்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகமொன்றே குறித்த மாணவர்களை இடைநிறுத்தியுள்ளது.

இந்த இடைநிறுத்தமானது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்சூர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர்கள் பாகிஸ்தான் அணியின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதன் காரணமாக, பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்கும் நோக்கில் அவர்களை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தாம் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காஷ்மீரைச் சேர்ந்த பெற்றோர்கள் சிலர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.