ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக நிர்வாணப் போராட்டம்!!

309

Rasia

பெமென் என்ற பெண்ணிய இயக்கம் பெண்களை இழிவு படுத்துதல், பாலின பாகுபாடு, ஓரினச்சேர்க்கை, மாநிலங்களுடனான தேவாலயப் பிரச்சினைகள், சர்வாதிகார ஆட்சி மற்றும் தேர்தல் மோசடிகளை எதிர்த்து செயல்பட்டு வருகின்றது.

அமெரிக்காவில் உள்ள இந்த இயக்கத்தினைச் சேர்ந்த ஐந்து பெண்கள் நேற்று நியூயோர்க்கின் டைம் சதுக்கத்தில் கூடி கிரிமியாவை ஆக்ரமிக்க எண்ணும் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதினுக்கு எதிராக எழுதப்பட்டிருந்த வாசகங்களையும், அவருக்கு எதிராக அமெரிக்கா-ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைகளை வேண்டிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்த அட்டைகளையும் அவர்கள் பிடித்திருந்தனர்.

புதினுக்கு அமெரிக்காவைப் பார்த்தோ ஐரோப்பிய யூனியனைப் பார்த்தோ பயமில்லை. உக்ரைனில் தனது விளையாட்டுத்தனத்தைத் தொடரும் அவருக்கு மக்களின் சக்தி குறித்துதான் பயம் உள்ளது என்று உறைகுளிரில் நடத்திய தங்களின் ஆர்ப்பாட்டத்தை சிறிது நேரத்தில் முடித்துக்கொண்ட ஷெவ்சென்கோ என்ற உறுப்பினர் கூறினார்.

தனி நபர், அதிகாரிகளின் சொத்துகளை முடக்குவது, விசா கட்டுப்பாடுகள் தவிர ரஷ்யா மீது தீவிரமான நடவடிக்கைள் எடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரினர். இதேபோல் நேற்று கிரிமியா பகுதியின் தலைநகர் சிம்பெரோபோலில் உள்ள பிராந்திய நாடாளுமன்றத்திற்கு முன்னால் உக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு எதிராக மேலாடையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்ணியவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

உக்ரைனில் நடந்துவரும் அரசியல் பிரச்சினையில் கிரிமியாவை ஆக்ரமிக்க எண்ணும் ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் விசா தடைகளை நேற்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் சொத்துகளை முடக்கவும் ஒபாமா அரசு உத்தரவிட்டுள்ளது.