கொழும்பில் தங்கையின் திருமணத்தில் திடீரென மரணடைந்த சகோதரன்!!

2719

தங்கையின் திருமணத்தில்..

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் திருமண நிகழ்வின் போது மணமகளின் சகோதரனன் திடீர் மரணமடைந்துள்ளார். மஹர பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு திடீர் மரணமடைந்துள்ளார்.

தனது தங்கையின் திருமண நிகழ்விற்காக பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள நிகழ்வு மண்டபத்திற்கு அவர் சென்றுள்ளார். இதன் போது நல்ல உடல் நிலையும் இருந்தவர் திருமண நிகழ்விற்கு இடையில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையிலும் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிலியந்தலை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.