கொரோனாவை சிறப்பாக கையாண்ட நாடுகள் : நியூசிலாந்து முதலிடம், இலங்கைக்கு 10வது இடம்!!

861

கொரோனாவை சிறப்பாக கையாண்ட நாடுகள்..

கொரோனா வைரஸ் தொற்றுநோயை நியூசிலாந்து, உலகின் ஏனைய நாடுகளை விட மிகவும் திறம்பட கையாண்டுள்ளது என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த லோவி நிறுவனம் சுமார் 100 நாடுகளின் கொரோனா வைரஸ் நிலையை மதிப்பிடும் ஒரு புதிய தரவினை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் சோதனை விகிதங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கருத்திற்கொண்டுள்ளனர்.

இதில் நியூசிலாந்து முதல் இடத்திலும், வியட்நாம், தைவான் மற்றும் தாய்லாந்து ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. அவுஸ்திரேலியா இந்த பட்டியலில் 8வது இடத்தையும், இலங்கை 10வது இடத்தினையும் படித்துள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்கா 94வது இடத்திலும், இந்தோனேசியாவும், இந்தியாவும் முறையே 85 மற்றும் 86 இடங்களில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் பொதுவாக கொரோனா தொற்றை மிகவும் திறம்பட கையாண்டுள்ளன என்பதை இந்த ஆய்வு காட்டியுள்ளதாக நிறுவனத்தின் ஹெர்வ் லெமாஹியு தெரிவித்துள்ளார்.

“10 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகள், சுகாதார அவசரநிலையைக் கையாள்வதில், பெரிய நாடுகளை விட அதிக சுறுசுறுப்பானவை என்பதை நிரூபித்தன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.