இலங்கையில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி : IDH வைத்தியசாலையின் விசேட வைத்தியருக்கு செலுத்தப்பட்டது!!

620

கொரோனா தடுப்பூசி..

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா ஷெனேக்கா கொவிஷீல்ட் தடுப்பூசி முதலாவதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : கொரோனா தடுப்பின் முதலாவது தடுப்பூசி கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையின் சுகாதார ஊழியருக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் முதலாவது வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மேலதிகமாக மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலை, கிழக்கு கொழும்பு வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, ஹோமாகம வைத்தியசாலை, வடக்கு கொழும்பு வைத்தியசாலை (ராகம வைத்தியசாலை) ஆகியவற்றில் இந்த தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களில் நூற்றுக்கு 25 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றது. 5 நாட்களுக்குள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நிறைவடையும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் ரெிவித்துள்ளார்.

மேலும் ஏனைய மாவட்டங்களில் உள்ள மருந்து களஞ்சிய அறைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் வைத்தியசாலைகளுக்குள் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளாார்.