லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்!!

542

Balajiநகைச்சுவை நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. விஜய் தொலைகாட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி.

இவரை லொள்ளு சபா பாலாஜி என்றும் அழைத்தனர்.சூப்பர் டென் நிகழ்ச்சியிலும் வந்தார். நகைச்சுவை நடிகர் சந்தானத்தை தொலைகாட்சியில் அறிமுகப்படுத்தியவர் இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு நகைச்சுவை வசனம் இவர் தான் எழுதினார். அனகாபுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பாலாஜிக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலை அவரது உடல் நிலை மோசமானது. உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றிகாலை 8 மணிக்கு மரணம் அடைந்தார். பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.