அதர்வாவுடன் காதல் இல்லை : குமுறும் ப்ரியா ஆனந்த்!!

449

Atharvaப்ரியா ஆனந்தும், அதர்வாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் இரும்புக் குதிரை என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ப்ரியா ஆனந்திடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். அதர்வாவையும், என்னையும் இணைத்து கதைகட்டி உள்ளனர்.

அதர்வா டீசன்டானவர் நான், அதர்வா மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் அமர்நாத் மூவரும் ஒன்றாக இருப்போம். நான் எதுவும் பேசமாட்டேன் என்று கருதி இதை கிளப்பிவிட்டுள்ளார்கள் என்றார். மேலும் அவர் கூறியதாவது..

நிறைய நல்ல படங்களில் நடிக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கமரா முன்னால் மட்டும்தான் நான் நடிப்பேன். இதனால்தான் நிறைய பேருக்கு என்னை பிடிக்கிறது. தமிழில் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. இதனால் இந்தி படங்களில் நடிக்க முடியவில்லை.என்று கூறினார்.