சிக்கலில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்!!

459

Nimirindhu-Nil-Movie-First-Look-Wallpapers

சமுத்திர கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் நிமிர்ந்து நில். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், படத்தின் விநியோகம் சம்பந்தமான பிரச்சினையில் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே சிறு பிரச்சினை எழுந்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னரே படம் வெளியாகுமா என்று தெரிய வரும்.

இதேபோல் பெரும்பாலான படங்களுக்கு ரீலீசாகும் திகதியில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு படம் குறித்த நேரத்தில் வெளியாகும். அதேபோல், இந்த படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.