ஈபிள் கோபுரத்தை திருடும் நபர் : இணையத்தை கலக்கும் வீடியோ!!

610

Efilபிரான்சின் உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவரை நபர் ஒருவர் திருடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஸாச் கிங் என்ற 26 வயது மிக்க நபர் பலவிதமான மாயாஜாலங்களை புரிந்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இவர் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான பிரான்சின் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை திருடுவது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளார்.

7 விநாடிகளை கொண்ட இந்த வீடியோவை கண்டு பலர் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் இவர் செய்வது கண்கட்டு வித்தைகள் என்றாலும், இவற்றை கண்டு ரசிக்கவே ஆயிரக்கணக்கானோர் இணையதளத்தில் திரண்டுள்ளனர்.

சாத்தியமற்ற விடயங்களையும் இயல்பாக மாற்றுவதே தனிச்சிறப்பாய் கொண்ட இவரது வீடியோக்கள் பல்லாயிரகணக்கானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.