வவுனியாவில் இடம்பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!!

1302


சுதந்திர தின நிகழ்வுகள்..


இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2021) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உட்பட பிரதம விருந்தினர், அதிதிகள் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினரின் மோட்டார் வாகன பேரணியுடன் அழைத்து வரப்பட்டனர்.


அத்துடன் இந் நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலிபனை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்றார்.


அதனைத் தொடர்ந்து நகரசபை மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட இடத்தில் தேசியக் கொடியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலிபன் ஏற்றி வைத்ததுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இடம்பெற்றது.

அதன் பின்னர் சமயத்தலைவர்களின் ஆசியுரை, மாணவர் உரை, பிரதம விருந்தினர் உரை, மரம் நடுகை போன்ற பல நிகழ்வுகளுடன் சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவுற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், கடற்ப்படை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நகரசபை, உள்ளுராட்சி மன்றம்,

மாவட்ட செயலகம், போன்றவன்றின் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள், பாடசாலை மாணவர்கள், சர்வ மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.