வவுனியாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5300 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!!

1066

5300 மரக்கன்றுகள்..

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 5300 மரக்கன்றுகள் இன்று (04.02.2021) நாட்டப்பட்டன.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 5300 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

அந்தவகையில் வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 9.29 இற்கு வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன ஆகியோர் இணைந்து மரம் ஒன்றினை நாட்டி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காமினி மகாவித்தியாலய மைதானம், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் பிரிவுகள், பாடசாலைகள், வலயக் கல்வித் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் மரநடுகை இடம்பெற்றது.

இதன்போது இலுப்பை, வேப்பிலை, மருத மரங்களுக்கு முன்னிரிமை வழங்கப்பட்டு நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.