239 பேருடன் மலேசியவிலிருந்து சீன நோக்கி பயணித்த விமானம் மாயம்!!

912

Malaysia Airline

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளது.

மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டு 2 மணி நேரத்துக்குள் மாயமாகியுள்ளது.

காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேர் இருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மலேசியா- வியட்நாம்- சீனாவுக்கு இடைபட்ட வான் எல்லை வழியாக காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை முழு வேகத்தில் நடந்து வருவதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானத்தில் பயணித்தவர்களில் சீன நாட்டைச் சேர்ந்த 152 பேரும் மலேசியாவைச் சேர்ந்த 38 பேரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 38 பேரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நால்வரும் பிரான்ஸைச் சேர்ந்த மூவரும் பயணித்துள்ளனர்.