வவுனியாவில் நடைபெற்ற ஆளுமை நிறைந்த மாதரை உருவாக்கும் பிரதேசமட்ட கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும்!!

1183


கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும்..


வவுனியாவில் ஆளுமை நிறைந்த மாதரை உருவாக்கும் பொருட்டு மகளிர் அபிவிருத்தி நிலைய பிரதேச மட்ட கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.வவுனியா பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தில் இன்று (05.02) இடம்பெற்றது.


இதன்போது பெண்களின் ஆளுமையை விருத்தி செய்யும் நோக்கில் வழங்கப்பட்ட கைத்தொழில் மற்றும் கைவினை உற்பத்தி பயிற்சிகளை பூர்த்தி செய்த பெண்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்,


அவர்கள் தொடர்ந்தும் அத் தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான உதவிகளும் பிரதேச செயலகத்தால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் ஆளுமை நிறைந்த மாதர்களாக தொழில் முயற்சிக்கு தயாரானவர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன்,

மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தேன்மொழி, கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போதனாசிரியர்கள், பயிலுனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.