கிளிநொச்சி நகரை சென்றடைந்துள்ள பொத்துவில் : பொலிகண்டி மக்கள் பேரணி!!

1387

மக்கள் பேரணி..

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியின் போராட்டக்காரர்கள் தற்போது கிளிநொச்சி நகரப்பகுதியை சென்றடைந்துள்ளனர்.

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நான்காவது நாளான இன்று வவுனியாவில் ஆரம்பித்து பேரணி கிளிநொச்சி நோக்கி நகர்ந்துள்ளது.

இதன்போது குறித்த பேரணியை ஆதரிக்கும் வகையில் கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியின் இரு மருங்கிலும் திரண்டு நிற்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.