இலங்கையில் முதன் முதலாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை!!

1616

சத்திர சிகிச்சை..

பிறப்பிலேயே காது கேட்காத பிரச்சினையுடைய இரண்டு வயதுடைய குழந்தைக்கு கோக்லியர் உள்வைப்பு சத்திரசிகிச்சை ஒன்று ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரச வைத்தியசாலை ஒன்றில் இரண்டு காதுகளுக்கும் இவ்வாறான சத்திரசிகிச்சை செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொண்டை காது மூக்கு தொடர்பான விசேட நிபுணர் சன்ஜீவனி ரூபசிங்கவின் தலைமையில் விசேட வைத்தியர்கள் 10 பேர் இணைந்து இதனை செய்துள்ளனர்.

10 மணித்தியாலத்திற்கு அதிக நேரம் இந்த சத்திரசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்த சத்திரசிகிச்சைகாக பயன்படுத்தப்படும் ஒரு உபகரணத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரையில் செலவிடப்படுகின்றது.

தனியார் வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை செய்வதற்கு 75 லட்சம் ரூபாய் செலவிடப்படுகின்றது. சத்திர சிகிச்சைக்கு அவசியமான உபகரணங்கள் குழந்தையின் பெற்றோர்கள் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இதுவரை இலங்கையில் இது போன்ற சத்திரசிகிச்சைகள் ஒரு காதிற்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இரண்டு காதுகளுக்கு ஒரே நேர்த்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன் மூலம் அந்த குழந்தை கேட்கும் திறனை பெறும் என குறிப்பிடப்படுகின்றது.