வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 3 பாடசாலைகள் 1000 தேசிய பாடசாலை திட்டத்தில்!!

3001

ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து 3 பாடசாலைகள் தெரிவுக்காக முன்மொழியப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் நாடு முழுவதும் 1000 புதிய தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் இருந்து தமிழ்- முஸ்லிம்- சிங்களப் பாடசாலைகள் ஒவ்வொன்று வீதம் 3 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்படவுள்ளன.

அந்தவகையில் செட்டிகுளம் மகாவித்தியாலயம், அல்-ஹாமியா முஸ்லிம் வித்தியாலயம், பரக்கும் மகாவித்தியாலயம் என்பன தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் ஏற்கனவே இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, தமிழ் மத்திய மகாவித்தியாலயம், முஸ்லிம் மகாவித்தியாலயம், மடுகந்தை தேசிய பாடசாலை, காமினி மகாவித்தியாலயம் என்பன தேசிய பாடசாலைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.