இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் இலங்கை தேசியக் கொடியுடன் இருக்கும் நபர் யார்!!

1145

இலங்கையர்..

இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள விவசாய சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையர் ஒருவரும் கலந்துகொண்டுள்ளார்.

குறித்த இலங்கையரின் நடவடிக்கை இந்திய ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளன. இந்த போராட்டத்தில் இணைந்துள்ள இலங்கையர் தெரணியாகல பகுதியில் வசிக்கும் நாலக நாரமல்ல ஆகும்.

கடந்த ஆண்டு இந்தியாவுக்குச் சென்ற நாலக, கோவிட் – 19 தொற்றுநோய் பரவலால் விமானம் இரத்து செய்யப்பட்டதால் சுமார் ஒரு வருடம் இந்தியாவில் செலவிட வேண்டியிருந்தது.

இந்நிலையிலேயே, விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க அவர் இலங்கைக் கொடியுடன் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு அவர் அளித்த ஆதரவை இந்திய ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

விவசாயிகளின் போராட்டம் பற்றிய தகவல்களை இலங்கையர்களிடம் சமூக ஊடகங்களில் தெரிவிக்க நாலக மேற்கொண்ட முயற்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதானி உட்பட பல தனியார் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்திய அரசு நிறைவேற்றிய விவசாய சட்டங்களுக்கு எதிராக 2020 செப்டம்பரில் தொடங்கிய இந்திய விவசாயிகள் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது.