வவுனியாவின் முக்கிய பகுதிகளில்பாத்தீனியம் களையகற்றிய மாணவர்கள்!!(படங்கள்)

1034

வவுனியாவில் பாத்தீனியம் களை அதிகரித்து வரம் நிலையில் மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் அவற்றை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா பொலிஸாரும் பாடசாலை மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச் செயற்பாட்டில் வவுனியா பிரதேசத்தில் முக்கிய இடங்கள் மற்றும் வீதியோரங்களில் களைகள் அகற்றப்பட்டன.

முதற்கட்டமாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அதிகளவாக காணப்பட்ட பாத்தீனியம் களைகள் பெருமளவில் நேற்று அகற்றப்பட்டன.

இதன்போது பாத்தீனியம் களையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களையும் மக்களுக்கு வழங்கியிருந்தனர்.

2 31