முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க அடையாளம் : தடுமாறும் தொல்லியல் அதிகாரிகள்!!

4125

அகழ்வாராய்ச்சி..

தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு, ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து கடந்த 18ஆம் திகதி குறித்த பகுதியில் தொல்லியல் ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ன.

தொல்லியல் திணைக்களத்தோடு இராணுவத்தினரும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்தேகத்திற்கிடமான சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த சிதைவுகள் தொடர்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

குறித்த பகுதியில் தற்போது தொல்லியல் திணைக்களத்தினரால் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், இது பாரம்பரியமான சிவபூமி என அனைவராலும் திடமாக நம்பப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சிவலிங்கத்தை ஒத்த குறித்த சிதைவு மீட்கப்பட்டுள்ளமை தொடல்லியல் அதிகாரிகளை தடுமாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது.