வவுனியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த பொலிஸார் : அமுலாகும் புதிய நடைமுறை!!

3948

மின்சார மோட்டார் சைக்கிள்..

வவுனியா மாவட்டத்தில் இது வரையிலான காலமும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவுப் பத்திரம், காப்புறுதி, தலைக்கவசம் என்பன தேவையற்ற நிலையில் காணப்பட்டதுடன் தற்போது வவுனியா பொலிஸாரினால் குறித்த ஆவணங்கள் மற்றும் தலைக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் இன்றி பயணித்த மூன்று மின்சார மோட்டார் சைக்கில்களை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த மோட்டார் சைக்கில்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்சார மோட்டார் சைக்கில்களுக்கு இது வரையிலான காலப்பகுதியில் தலைக்கவசம் உட்பட மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தேவையின்றி காணப்பட்டது.

இந்நிலையில் இன்று (10.02.2021) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவுப் பத்திரம், காப்புறுதி, தலைக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதாவும்,

அதனை மீறி செயற்படும் மின்சார மோட்டார் சைக்கில் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வவுனியா பல இடங்களில் பரவலாக குறித்த மின்சார மோட்டார் சைக்கில்களை விற்பனை முகவர்கள் எவ்வித ஆவணங்கள், தலைக்கவசம் என்பன தேவையில்லை என மக்களை ஏமாற்றி விற்பனை மேற்கொள்ளவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த விற்பனை முகவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.