கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமை : கடுமையாக அமுலாகும் சட்டம்!!

1219

கொரோனா..

கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது கடுமையாக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை கட்டுப்படுத்த பொது மக்களின் அர்ப்பணிப்பு அத்தியாவசியம் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு நேற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டின் கொரோனா பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையால் நாங்கள் தயங்க போவதில்லை. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர், சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் காரணமாக வீடுகளில் வைபவங்களை நடத்த அனுமதி கோரி, சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலங்களுக்கு வர வேண்டாம். இலங்கையில் தற்போது வரையறைக்கு உட்பட்டே திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த முடியும்.

இந்த நிலையில் இன்றைய தினம் முதல் நாங்கள் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.