கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்க திட்டம்!!

1023

கொரோனா தொற்றாளர்..

கோவிட்- 19 தொற்றாளர்கள் காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத கோவிட்- 19 தொற்றாளர்களை இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் பரவும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்கக் கூடாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

கோவிட்- 19 நோயாளிகளை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்க முடியாது என்பதால், சம்பந்தப்பட்ட சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவில் கோவிட்- 19 தொற்றாளர்கள் வீடுகளில் தங்க வைப்பட்டே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-