வவுனியா புகையிரத நிலைய வீதியில் போக்குவரத்து 20 நிமிடங்கள் ஸ்தம்பிதம்!!

3811


புகையிரத நிலைய வீதியில்..


வவுனியா புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்து இன்று (15.02.2021) மதியம் 12.35 தொடக்கம் மதியம் 12.55 வரையிலான சுமார் 20 நிமிடங்களாக ஸ்தம்பிதம் அடைந்தமையினால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரு புகையிரதங்களின் நேரசூசி மாற்றமடைந்தமையினால் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் வரையும் புகையிரத நிலைய வீதியில் புகையிரத கடவைகள் மூடப்பட்டிருந்தன.


அதன் பின்னர் இரு புகையிரதங்களும் வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னரே சென்றமையினால் வவுனியா புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.


குறித்த போக்குவரத்து ஸ்தம்பிதத்தினால் சுமார் 1 1/2 கிலோமீற்றர் வரையில் வாகனங்கள் வரிசையில் காத்திருந்ததுடன் புகையிரத கடவை திறந்தவுடன் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் வாகனங்கள் சென்றமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.