வவுனியாவில் உரிமை கோரப்படாமல் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!!

1163


சுவரொட்டிகள்…


வவுனியா நகரின் பல பகுதிகளில் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே ஏழை விவசாயின் தலையில் மண் அள்ளிப்போடாதே போன்ற பல வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.பறிக்காதே பறிக்காதே மன்னார் கோயில் மோட்டைக் காணியைப் பறிக்காதே, மன்னார் கூட்டத்தில் விவசாயிகள் காணி வேண்டாம் என்று பொய் சொன்னதாக பொய் சொல்ல வேண்டாம்,


மன்னார் அரசாங்க அதிகாரிகளே, மன்னார் காணியில் 35 வருடகாலமாக விவசாயம் செய்த கோயில் மோட்டை விவசாயிகளுக்கு காணிகளை வழங்குங்கள் போன்ற பல வாசகங்களை தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.


எனினும் குறித்த சுவரொட்டிகள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுவதுடன் சுவரொட்டிகள் வவுனியா நகர், மன்னார் வீதி, நெளுக்குளம், புகையிரத நிலைய வீதி போன்றவற்றில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.