இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியை வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது!!

537

Cri -fixஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான ஐந்து பேரும் மும்பை வாசிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணமும், 26 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் சூதாட்டத் தொகை பல கோடி ரூபாய்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர்கள் இதற்கு முன்னரும் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவர்கள் என்று கூறப்படுகிறது.