வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!!

972


பொலிஸ் அத்தியட்சகர்..


வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று(15.02.2021) காலை விஜயம் மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா பொலிஸாரின் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மரம் நாட்டும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பரிசோதனை நடவடிக்கை பொலிஸாரின் அணிவகுப்புடன் ஆரம்பமாகியதுடன் பொலிஸாரின் உடையில் காணப்படும் குறைபாடுகள், வாகனங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள்,


பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் குறைபாடுகள், பொலிஸாரின் ஆவணங்கள் என்பவற்றினை கண்காணித்ததுடன் அங்கு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.


அதன் பின்னர் சுற்றுப்புற சூழலினை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி-3) ஜெகத் வீரக்கோன் மற்றும் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப் குமார் உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.