தந்தையின் தாக்குதலில் மகன் பரிதாபமாக பலி!!

727

Deadபன்னிப்பிட்டிய, பெலென்வத்த பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது சொந்த மகனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார்.

குடி போதையில் இருந்த மகனுடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின்னதாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 33 வயதான நபர் ஒருவரே சம்பவத்தின்போது உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.