ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண் : அணியும் கவர்ச்சி ஆடையால் ஏற்பட்ட பரிதாபம்!!

23050

கனடாவில்..

கனடாவில், ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர், அவர் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளார்.



லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்தவர் இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான சப்ரினா சக்கு (29). கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சி மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கிறார் சப்ரினா.

ஆனால், அவர் எப்போதும் கவர்ச்சி உடைகளையே அணிவதால், அவரை சம்பாதிக்கும் பெண்ணாக யாரும் ஒப்புக்கொள்வதில்லை என்றும், யாரோ ஒரு பணக்கார ஆணை சார்ந்திருக்கும் பெண் என்றே தன்னை மக்கள் கருதுவதாகவும் வருந்துகிறார் அவர்.

தனது ஆடம்பர வாழ்வுக்காக ஒரு ஆணை சார்ந்து வாழ தனக்கு எப்போதுமே ஆசை இல்லை என்று கூறுகிறார் சப்ரினா.

ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன் ஆறு இலக்க ஊதியம் பார்த்த பின்னரே செட்டில் ஆகவேண்டும் என்றும், எப்போதுமே தான் நம்புவதாக தெரிவிக்கிறார் சப்ரினா.