வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்கள வாயிலில் நீதி கோரி காத்திருந்த ஆசிரியர்!!

7008


கல்யாணி திருநாவுக்கரசு..


வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியராகிய கல்யாணி திருநாவுக்கரசு என்பவர் கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தின் வாயில் முன்பாக இன்று காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையிலான காலப்பகுதி வரை கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


வவுனியா சூடுவெந்தபுலவு அல் இக்பால் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியினை சேர்ந்த பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.


இந்நிலையில் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட காலப்பகுதியில் பணியாற்றிய சம்பள பதிவேட்டின் பிரதி மற்றும் நியமன பதவி உறுதிப்படுத்தல் கடிதம் போன்ற பல கோரிக்கைகளை வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திடம் கோரிய போதிலும்,

அவர்கள் வழங்க மறுத்துள்ளதாகவும் தெரிவித்து அவரது கோரிக்கைக்கு உரிய தீர்வினை கோரி கல்வித் திணைக்களத்தின் வாயிலின் முன்பாக அமர்ந்திருந்து கவயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.

போ.ராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஆசிரியர் 2014 ,2015 ஆம் ஆண்டு சம்பள விபரம் வழங்குக, எனது சம்பள நிலுவை வழங்கப்பட்ட 2,37,000 ரூபாவிற்குரிய ஆவணங்களின் பிரதியிளை உடனடியாக வழங்குக, நான் உடனடியாக பாடசாலை செல்ல வேண்டும் தாமதம் வேண்டாம் போன்ற வாசகங்களை தாங்கிய பாதாதையினை ஏந்தியவாறு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.