திருமண இணையத்தளத்தில் சந்தித்த பெண்ணால் இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்!!

6013

கர்நாடகா மாநிலத்தில்..

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் சந்தித்த இளம் பெண் பணம் கேட்டு மி.ரட்டுவதாக கூறி இளைஞர் ஒருவர் காவல்துறையை நாடியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் அம்பித் குமார் மிஸ்ரா. இவரே திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட பெண்ணால் ஏ.மாற்றப்பட்டுள்ளார். திருமணத்திற்காக பெண் தே.டிய அம்பித், பிரபலமான மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரேயா என்பவருடன், அந்த தளம் வாயிலாக அறிமுகமாகியுள்ளார். அம்பித் குமாரை திருமணம் செய்து கொள்ள ஸ்ரேயா ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் தொலைபேசியில் பேசி பழகி வந்துள்ளனர். அடிக்கடி வீடியோ அழைப்பிலும் இருவரும் தங்கள் எதிர்காலம் குறித்து பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7ம் திகதி, இருவரும் தனியாக வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது, ஸ்ரேயா தனது ஆ.டைகளை க.ளைந்ததுடன், அம்பித் குமாரையும் க.ட்டாயப்படுத்தியுள்ளார்.

வருங்கால மனைவி என்பதால், அம்பித் குமாரும் ஆ.டைகளை க.ளைந்துள்ளார். ஆனால், குறித்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த ஸ்ரேயா, அதை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறி மி.ரட்டியுள்ளார்.

மேலும் தமக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தால், அந்த வீடியோ காட்சிகளை அ.ழித்துவிடுவதாகவும் கூறியுள்ளார். நடந்த சம்பவங்களால் அ.திர்ந்து போன அம்பித், மி.ர.ட்.ட.லு.க்.கு ப.யந்து முதலில் 20,000 அளித்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து ஸ்ரேயா பணம் கேட்டு மி.ரட்டவே, அம்பித் குமார் பொலிசாரை நாடியுள்ளார். ஸ்ரேயாவை இதுவரை அம்பித் நேரில் சந்திக்காத நிலையில், இந்த வழக்கை இணைய வழி கு.ற்றமாக பொலிசார் பதிவு செய்து, விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.