புலிகள் எனக் கூறி கப்பம் பெற முயற்சித்த குழு கொழும்பில் கைது!!

679

Arrestவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறி வெள்ளவத்தையில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வரும் மருத்துவரிடம் கப்பம் பெற முயற்சித்த குழுவொன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் தாம் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறி மருத்துவரை அச்சுறுத்தியுள்ளனர்.

மருத்துவரை அச்சுறுத்தி 10 லட்சம் ரூபாவை கப்பமாக பெற முயற்சித்த குழுவைச் சேர்ந்த 3 பேரை பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மொறட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.



மொறட்டுவ பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன்கள் கைப்பற்றப்பட்டதுடன், அவரது கணனியில் விடுதலைப் புலிகள் தொடர்பான காணொளிகள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.