வவுனியா நகரசபை மைதானத்தில் மாபெரும் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பம்!!

1410


கிரிக்கெட் சுற்றுப் போட்டி..


வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று ( 2021.02.20 ) காலை 8.30 மணியளவில் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமானது.மிஸ்டர் ஃபுட் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் 8 விளையாட்டுக் கழகங்கள் மோதும் மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டி இடம்பெறுகின்றது.


இன்றைய முதற் சுற்றுப்போட்டியை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் மற்றும் பிரதம பொலிஸ் அதிகாரி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அப்பிகைபாகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.