யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் விபத்து!!

970


விபத்து..


யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று காலை ஒன்பது மணியளவில் விபத்து நேர்ந்துள்ளது. யாழ். நோக்கிப் பயணித்த இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.உழவு இயந்திரமொன்று சடுதியாக நிறுத்த முயற்சிக்கப்பட்டமையால் அதன் பின்னால் பயணித்த பாரவூர்தி மோதியுள்ளது. எனினும் குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.