இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் உபுல் தரங்க ஓய்வு அறிவிப்பு!!

490


உபுல் தரங்க..


இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.அனைத்து நல்ல விடயங்களும் ஓர் கட்டத்தில் நிறைவு பெறுகின்றது எனவும் அந்த வகையில் தாம் தமது சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தம்மீது நம்பிக்கை கொண்டு தமக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.


தமது கிரிக்கட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்களின் போது பக்கபலமாக நின்ற, கிரிக்கட் ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி பாராட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உபுல் தரங்க 31 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 1754 ஓட்டங்களையும் 235 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6951 ஓட்டங்களையும், 26 டுவன்ரி-20 போட்டிகளில் 407 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.