இரட்டை இளைஞர்கள்..
பிரேசிலைச் சேர்ந்த மாயாவும் சோபியாவும், எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்யும் ஒரே உருவம் கொண்ட இரட்டையர்கள். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வது, உடையணிந்தாலும் ஒரே போல் உடையணிவது என இருந்த அந்த இரட்டையர்களைக் குறித்த ஒரு முக்கிய விடயம், அவர்கள் இருவரும் பிறக்கும்போது ஆண்கள்.
ஆனால், ஏனோ இருவருக்குமே ஆண்களாக வளர விருப்பமில்லை. ஆகவே, எல்லாவற்றையும் ஒரே மாதிரி செய்யும் இருவரும், சேர்ந்தே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதற்கு அவர்கள்து பெற்றோரும் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
சொல்லப்போனால் பெரும் செலவிலான அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்ததே அவர்கள் தாத்தாதானாம். Dr Jose Carlos Martins என்ற மருத்துவர், இந்த இரட்டையர்களுக்கு ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை செய்து, அவர்களை பெண்களாக மாற்றியிருக்கிறார்.
உலகிலேயே இப்படி இரட்டையர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன் என்கிறார் அவர். இப்போதும் அதே மகிழ்ச்சியுடன் சேர்ந்தே பெண்களாக உலாவருகிறார்கள் மாயாவும் சோபியாவும்.