கிளிநொச்சி தருமபுரம் நெத்தலியாற்றுப் பகுதியில் காட்டு யானைகள் மூன்று மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதிக்குள் புகுந்து தாக்கியதில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் மிகமோசமான படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்தவர் முரசுமோட்டை, பழைய கமம் பகுதியை சேர்ந்த கிளி. முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான சிவசுப்பிரமணியம் கஜானன் (19 ) ஆவார்.
கிளிநொச்சி கல்மடுநகர் முருகன் வீதியை சேர்ந்த 64 வயதுடைய குடும்பஸ்தரான சோமசுந்தரம் சபாபதிப்பிள்ளை என்பவரே யானையின் தாக்குதலில் படுகாயமடைந்தவர்.
இந்த தாக்குதலை நடத்திய யானைகள் அண்மையில் தென்பகுதியில் இருந்து வன்னிப் பகுதியில் விடப்பட்டவை என பாதிக்கப்பட்ட பிரதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





