இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்களில் யுவதிகள் பலர் தற்போது தற்பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூரில் இவ்வாறான பயிற்சித்திட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. தாம் தமது நாட்டு திரும்பியதும் தேவையேற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாக வவுனியாவில் இருந்து 1990 ஆம் ஆண்டுகளில் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த சர்மிளா என்பவரை கோடிட்டு இந்திய செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமக்கு 10 வயதாக இருக்கும் போது இலங்கையில் கேட்ட குண்டு சத்தங்கள் இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இதன் காரணமாகவே தமது குடும்பம் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தது.
இந்தநிலையில் இலங்கையில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே தாம் நாடு திரும்பியதும் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தாமும் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த பல பெண்களும் தற்பாதுகாப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்மிளா குறிப்பிட்டுள்ளார்.