வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1134


கொரோனா..


வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 150 பேரிடம் வியாழக்கிழமை பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் முடிவுகள் இன்று (27.02) காலை வெளியாகிய நிலையில் அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், வவுனியா முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றைச் சேர்ந்த இருவரும், பொலிசார் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்திவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.