துயர்பகிர்வு : திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை!!

12630

 திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை
மண்ணில் : 1955.09.23 விண்ணில் :2021.02.27

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் மன்னார், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 27.02.2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப் செபஸ்டியன் எலிசபெத் பாக்கியம் தம்பதிகள், அகஸ்டின் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பேரனும், காலஞ்சென்றவர்களான செபஸ்டியன் அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சவுரிமுத்து கிளாரம்மா தம்பதிகளின் மருமகனும், மேரி தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

யசிந்தா, மரிஸ்ரெலா   (லண்டன்), மரியகொன்செப்ரா , அன்ரன் ஜெயமலர் , காலஞ்சென்ற தோமஸ் வில்லநோவா, ஜோர்ஜ் அல்வீனஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பேரின்பநாதன், அன்ரன்  (லண்டன்),  சௌந்தரராஜா, குமுதினி, சுபானு(பிரான்ஸ்), ஞானசேகரம்(சுவிஸ்), குணசேகரம்(லண்டன்), பரராஜசேகரம்(ஜெர்மனி), ஜெயமணி(சுவிஸ்), நவமணி(லண்டன்), திரேசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்