இளம் யுவதி..

இளம் பெண் ஒருவரின் த.லையற்ற உ.டலை பொ.தியிட்டு கொழும்பு டாம் வீதிக்கு கொண்டு வந்து கை.விட்டுச்சென்றவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சந்தேகநபர் புத்தள காவல்துறையை சேர்ந்த உதவி பரிசோதகர் என்பது தெரியவந்துள்ளது. இதேவேளை கொ.லை செ.ய்யப்பட்ட பெண் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உ.யிரிழந்தவர் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளம் பெண் சிவனொளிபாத மலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் கா.ணாமல் போ.னதாக அண்மையில் மு.றையிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவரின் உ.டலம் ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் கி.டத்திச்செல்லப்பட்டமை சீசீடிவி காணொளியின் மூலம் கண்டறியப்பட்டது.

இதேவேளை பயணப்பொதி ஒன்று தொடர்பில் டாம் வீதி வர்த்தகர்கள் வழங்கிய தகவலை அடுத்து காவல்துறையினர் அதனை சோ.தனையிட்டபோதே அதில் பெ.ண்ணின் உ.டலம் இருப்பது கண்டறியப்பட்டது.





