திருமணத்துக்கு முதல்நாள் மாயமான மணப்பெண் : அதிர்ச்சியில் இருந்த மணமகன் வீட்டார் செய்த செயல்!!

1317

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணத்துக்கு முதல்நாள் மணப்பெண் மா.யமானதால் மாப்பிள்ளை அ.திர்ச்சியடைந்த நிலையில் சுதாரித்து கொண்டு பெண் வீட்டாரிடம் நஷ்ட ஈடு கோரி பு.கார் கொடுத்துள்ளார்.

செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், மதுராந்தகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

திருமண கனவுகளுடன் மணமகனும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் திருமண மண்டபத்துக்கு வந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு அறுசுவை விருந்தும் தயாரானது.

ஆனால் மணப்பெண் வீட்டார் வராத நிலையில் அவர்களுக்கு மணமகன் வீட்டார் போன் செய்தனர். அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையம் சென்று வருவதாக கூறிச்சென்ற மணப்பெண் அதன்பிறகு மா.யமாகி விட்டதாக தெரிவித்தனர்.

மணப்பெண் மா.யமான தகவல் கேட்டு மணமகன் மற்றும் அவரது பெற்றோர் அ.திர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்து கொண்ட அவர்கள் நேராக காவல் நிலையம் சென்றனர்.

அங்கு திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணப்பெண் மா.யமானதால், மணமகளுக்கு எடுத்து கொடுத்த நகை, பட்டுப்புடவைக்கான பணம்,

வரவேற்பு நிகழ்ச்சிக்கு விருந்து வைக்க செய்த செலவு உள்ளிட்டவைகளை பெண் வீட்டார் நஷ்டஈடாக தரும்படி பு.கார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.