காதல் முறிவுக்குப் பின் ஹன்சிகாவுக்கு குவியும் படங்கள்!!

877

Hansika happy

ஹன்சிகாவும் சிம்புவும் காதலித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்தார்கள். ஆனால் திடீர் என கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். காதல் முறிந்து விட்டதாக சிம்பு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார்.

சிம்புவின் புது படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்றும் எனவே தகராறு போட்டு பிரிந்து விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுக்கு நிறைய படவாய்ப்புகள் வருகிறதாம். மார்க்கெட்டும் உயர்ந்து விட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஹன்சிகா படப்பிடிப்பில் நடிகர், நடிகைகளிடம் கலகலப்பாக பேசி குஷியாக இருக்கிறாராம். எட்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.