மோட்டார் சைக்கிள்..
நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தி.ருடிய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 78 வயதுடைய குறித்த நபர் அரலங்வில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரால் திருடப்பட்ட 17 மோட்டார் சைக்கிள்களை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முதியவரால் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு பெருமளவு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முதியவரிடம் மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.