70 ஆயிரம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இந்த வருடத்தில் மலேசியாவுக்கு விஜயம் செய்வார்கள் என மலேசிய சுற்றுலாத்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 64 ஆயிரத்து 51 இலங்கை சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
மலேசியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
அவர்களின் இலங்கை விஜயம் வெற்றியளித்துள்ளதாக மலேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.